பாஜகவுக்கு செக் வைக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளை படுஜோராக திட்டமிடும் காங்கிரஸ்

கர்நாடக சட்டப்பேரவையில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
பாஜகவுக்கு செக் வைக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளை படுஜோராக திட்டமிடும் காங்கிரஸ்


கர்நாடக சட்டப்பேரவையில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

காங்கிரஸ் மற்றம் மஜதவில் இருந்து எம்எல்ஏக்களை பேரம் பேசி தன் பக்கம் இழுக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தாங்களும் அதே பாணியைக் கடைப்பிடிப்போம் என்றும் எச்சரிக்கையும் விடுத்தார்.

கர்நாடகாவில் ஆட்சியமைக்க பாஜக எந்த அளவுக்கு தீவிரம் காட்டி வருகிறதோ, அதை விட பல மடங்கு, பாஜகவை ஆட்சியமைக்க விடக் கூடாது என்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

ஒரு வேளை, கர்நாடகாவில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துவிட்டால் என்ன செய்வது என்பதுகுறித்தும் காங்கிரஸ் -மஜத தலைவர்களால் ஆராயப்பட்டுள்ளது.

அதன்படி, பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தால் அதனை எதிர்த்த உச்ச நீதிமன்றம் செல்ல கங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

தங்களது கட்சிக்கு இருக்கும் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஆளுநர் மாளிகைக்குக் கூட்டிச் சென்று ஆளுநர் முன்பு நிறுத்துவது,

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இந்த பிரச்னையை கொண்டு செல்வது என 3 முக்கிய திட்டங்களை காங்கிரஸ் எடுத்துள்ளது.

இன்று மாலை 4 மணியளவில், மஜத தலைவர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வராவும் ஆளுநரை சந்திக்க உள்ளனர். அப்போது, ஆதரவு எம்எல்ஏக்களின் கையெழுத்துப் பிரதிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதோடு, ஆட்சியமைக்க கர்நாடக ஆளுநர் அழைக்காவிட்டால், நாளை ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களும், எம்.பிக்களும் முடிவு செய்துள்ளனர்.

பாஜகவின் குதிரை பேரத்தில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்களைக் காப்பாற்றும் வகையில் மைசூருவில் உள்ள தனியார் விடுதியில் எம்எல்ஏக்களை தங்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த நடவடிக்கைகளால், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நேற்றைய நாளை விட, இன்று கர்நாடகாவில் கூடுதல் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com