அரசியலமைப்பு படுகொலையை சந்தோசமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்: நடிகர் பிரகாஷ் ராஜ் 

கர்நாடகாவில் நிகழும் அரசியலமைப்பு படுகொலையை சந்தோசமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு படுகொலையை சந்தோசமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்: நடிகர் பிரகாஷ் ராஜ் 

பெங்களூரு: கர்நாடகாவில் நிகழும் அரசியலமைப்பு படுகொலையை சந்தோசமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நடந்தது முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.  இதன் காரணமாக அங்கு குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

பல்வேறு பரபரப்பு திருப்பங்களின் நடுவே கர்நாடக முதல்வராக எடியூரப்பா வியாழன் காலை பதவி ஏற்றுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவில், உச்ச நீதிமன்றமும் எடியூரப்பா பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்நிலையில் கர்நாடகாவில் நிகழும் அரசியலமைப்பு படுகொலையை சந்தோசமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத்த தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பிரகாஷ்ராஜ் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

கர்நாடகாவில் அரசியலமைப்பு படுகொலை ஒன்று தொடங்கிவிட்டது. இனி மக்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியே வராது. ஆனால் எந்த எம்எல்ஏ எந்த அணிக்குச் செல்கிறார்? எந்த சொகுசு விடுதியில் எந்த எம்எல்ஏ இருக்கிறார்? அவரது புகைப்படம் உட்பட பிரேக்கிங் செய்திகள் புகுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். அரசியல் சாணக்கியத்தனம்..சந்தோசமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com