அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் செயல்படுவது வெட்கக்கேடானது: அமித் ஷா

அரசியல் ஆதாயத்துக்காக மதசார்பற்ற ஜனதா தளத்தை காங்கிரஸ் பயன்படுத்துவது வெட்கக்கேடானது என்றும் காங்கிரஸ் கட்சியின் முந்தைய
அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் செயல்படுவது வெட்கக்கேடானது: அமித் ஷா

புதுதில்லி: அரசியல் ஆதாயத்துக்காக மதசார்பற்ற ஜனதா தளத்தை காங்கிரஸ் பயன்படுத்துவது வெட்கக்கேடானது என்றும் காங்கிரஸ் கட்சியின் முந்தைய வரலாற்று பிழைகளை ராகுல் மறந்துவிடக்கூடாது என்று ராகுல் காந்திக்கு அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார். 

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததுடன் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டார். 

இதையடுத்து எடியூரப்பா இன்று காலை முதவராக பொறுப்பேற்றார். இது குறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். பாஜக, வெற்றியை கொண்டாடும் வேளையில், ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டதற்கு இந்தியா வருத்தம் கொள்ளும் என்று தெரிவித்திருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்க பதிவில், காங்கிரஸ் கட்சியின் முந்தைய வரலாற்று பிழைகளை ராகுல்காந்தி மறந்துவிடக்கூடாது.

காங்கிரஸ் கட்சியின் முந்தைய வரலாற்று பிழைகளை ராகுல்காந்தி மறந்துவிடக்கூடாது. எமர்ஜென்சி, அரசியல் சாசன பிரிவு 356-ஐ தவறாக பயன்படுத்துதல், நீதிமன்றம், ஊடகம் மற்றும் சிவில் அமைப்புகளை காங்கிரஸ் முடக்கி வைத்தது.

104 தொகுதிகளை பெற்ற பாஜக விற்கா அல்லது பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்த அமைச்சர்கள், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த முதல்வரின் 78 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் கட்சிக்கா? 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற மஜதவுக்கா? என்ற உண்மையை புத்திசாலி மக்கள் புரிந்து கொள்வார்கள்.

தேர்தலுக்கு பின் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் அளித்த ஆதரவு, கர்நாடக நலனுக்காக அளிக்கப்படவில்லை. வெற்று அரசியல் ஆதாயத்துக்காக அளிக்கப்பட்டது. இது வெட்கக்கேடானது. கர்நாடக மக்கள் யாரை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது தேர்தல் முடிவில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது என அமித் ஷா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com