எடியூரப்பாவின் தலைவிதியை முடிவு செய்யப் போகும் கடிதம்: ப.சிதம்பரம் 'நறுக்' 

எடியூரப்பாவின் தலைவிதியை ஆளுநரிடம் அவர் அளித்த கடிதம் முடிவு செய்ய உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
எடியூரப்பாவின் தலைவிதியை முடிவு செய்யப் போகும் கடிதம்: ப.சிதம்பரம் 'நறுக்' 

புதுதில்லி: எடியூரப்பாவின் தலைவிதியை ஆளுநரிடம் அவர் அளித்த கடிதம் முடிவு செய்ய உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

கர்நாடகாவில் நடந்தது முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.  இதன் காரணமாக அங்கு குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

பல்வேறு பரபரப்பு திருப்பங்களின் நடுவே கர்நாடக முதல்வராக எடியூரப்பா வியாழன் காலை பதவி ஏற்றுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். காங்கிரஸ் தாக்கல் செய்த நள்ளிரவு அவசர மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம், எடியூரப்பா பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்து விட்டது. ஆனால் எடியூரப்பா தனக்கு இருக்கும் எம்எல்ஏக்கள் ஆதரவு குறித்து ஆளுநரிடம் அளித்த கடிதத்தின் நகலை 48 மணி நேரத்துக்குள் பாஜக வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. எடியூரப்பா பதவியில் நீடிப்பது நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு உட்பட்டதுதான் எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் எடியூரப்பாவின் தலைவிதியை ஆளுநரிடம் அவர் அளித்த கடிதம் முடிவு செய்ய உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

எடியூரப்பாவின் வழக்கை நள்ளிரவில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றத்துக்கு நான் வணக்கம் தெரிவிக்கிறேன். நான் ஒருவேளை எடியூரப்பா இடத்தில் இருந்திருந்தால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவரும் 18-ம்தேதி, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிவரை நான் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன்.

எடியூரப்பாவின் தலைவிதியை ஆளுநரிடம் அவர் அளித்த கடிதம் முடிவு செய்ய உள்ளது. அந்தக் கடிதத்தில் 104 எம்எல்ஏக்களைத் தவிர வேறுஎந்த எம்எல்ஏக்களின் பெயரும் இடம் பெற்று இருக்க வாய்ப்பில்லை. ஆளுநரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எடியூரப்பாவை முதல்வராகப் பதவி ஏற்க அழைக்கவில்லை.

இவ்வாறு  சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com