கர்நாடகாவில் குதிரைப் பேரம்? ஹைதராபாத் சென்ற காங்கிரஸ், மஜத எம்எல்ஏ-க்கள்

கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க குதிரைப் பேரம் நடத்த வாய்ப்பு இருப்பதாக எண்ணி காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்எல்ஏ-க்கள் ஹைதராபாத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 
கர்நாடகாவில் குதிரைப் பேரம்? ஹைதராபாத் சென்ற காங்கிரஸ், மஜத எம்எல்ஏ-க்கள்

கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க குதிரைப் பேரம் நடத்த வாய்ப்பு இருப்பதாக எண்ணி காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்எல்ஏ-க்கள் ஹைதராபாத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 

கர்நாடகாவில் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவுக்கு, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள்கள் அவகாசம் கொடுத்துள்ளார். எடியூரப்பா ஆட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 8 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரை தேவை என்ற நிலை உள்ளது. அதனால், அங்கு காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரைப் பேரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கருத்தப்பட்டது. 

இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜத சட்டப்பேரவை உறுப்பினர்களை கட்சி மேலிடம் பாதுகாப்பாக முன்னாள் அமைச்சர் டிகே சிவகுமாரின் ஈகிள்டன் விடுதியில் தங்கவைத்திருந்தது. பின்னர்,  கூடுதல் பாதுகாப்பு கருதி அவர்களை பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு தனிவிமானம் மூலம் அழைத்துச் செல்ல திட்டமிட்டது. ஆனால், மத்திய விமானப் போக்குவரத்து துறை இயக்கம் அதற்கான அனுமதியை தர மறுத்தது. 

இதையடுத்து, நள்ளிரவு 2 மணி அளவில் காங்கிரஸ் மற்றும் மஜத சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேருந்து மூலம் ஹைதராபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.    

இந்நிலையில், எடியூரப்பா பதவியேற்புக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மஜத உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று வருகிறது. இந்த விசாரணையின் போது 15, 16 தேதிகளில் எடியூரப்பா ஆளுநரிடம் வழங்கிய கடிதத்தை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதனால், இந்த விசாரணையின் முடிவில் கர்நாடகத்தில் மீண்டும் திருப்புமுனை ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இதற்கிடையில், நாடு முழுவதும் எடியூரப்பா ஆட்சி அமைத்தது இந்திய ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கூறி பல கட்சி தலைவர்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com