கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்படுவதற்கு நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.    
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி 

புதுதில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்படுவதற்கு நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.    

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் பண ஆதாயம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைசச்சர்  ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் மீது, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்து உள்ளது.

இவ்வழக்குகளில் தன்னை கைது செய்யாமல் இருக்க கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் கோரி இருந்தார். இதன் அடிப்படையில் ஜூலை பத்தாம் தேதிவரை அவரைக் கைது செய்ய சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.    

சொந்த அலுவல் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என முன்னரே உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மே மாதம் 19-ம் தேதி முதல் 27-ம் தேதிவரை பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு கார்த்தி சிதம்பரம் பயணம் செல்ல நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

பயணம் செய்ய உள்ள விமானம், இந்தியாவுக்கு திரும்பும் தேதி ஆகியவற்றை விசாரணை முகமையிடம் தெரிவிக்க வேண்டும். வெளிநாடுகளில் புதிய வங்கி கணக்குகளை தொடங்கவோ, செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்குகளை முடிக்கவோ கூடாது. மேலும், வெளிநாடுகளில் சொத்து தொடர்பான எவ்வித பரிவர்த்தனைகளிலும் ஈடுபட கூடாது. இந்த பயணத்தை இதர நீதிமன்றங்களில் தடை உத்தரவு மற்றும் ஜாமீன் வாங்க பயன்படுத்த கூடாது.

பயணம் முடிந்து தாய்நாடு திரும்பியதும் பாஸ்போர்ட்டை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துவிட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ளதாகத் தெரிய வருகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com