நாய் இனத்தை விட ஆளுநர் விசுவாசமானவர்: காங்கிரஸ் தலைவர் சர்ச்சை கருத்து

கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலா, நாய் இனத்தை விட விசுவாசமானவர் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் சஞ்சய் நிருபம் சனிக்கிழமை விமர்சித்துள்ளார்.
நாய் இனத்தை விட ஆளுநர் விசுவாசமானவர்: காங்கிரஸ் தலைவர் சர்ச்சை கருத்து

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக உரையாற்றிய எடியூரப்பா, தங்களிடம் 104 எம்எல்ஏ-க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என்று கூறி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து கர்நாடகத்தில் ஆட்சி அமைக்குமாறு மஜத கட்சித் தலைவர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் நிருபம் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதில் அவர் கூறியதாவது:

தற்போது நமது நாட்டில் வாஜூபாய் வாலா, விசுவாசத்தில் புதிய சாதனைப் படைத்துள்ளார். இனிவரும் காலங்களில் இந்தியர்கள் அனைவரும் தங்கள் வீட்டு நாய்களுக்கு வாஜூபாய் வாலா பெயரைத் தான் சூட்டுவார்கள். ஏனெனில் நாய் இனத்தை விடவும் ஆளுநர் வாஜூபாய் வாலா விசுவாசமாக உள்ளார்.

நாட்டில் இன்று ஜனநாயகம் வென்றுவிட்டது. பணத்தாலும், அதிகாரத்தாலும், அகந்தையாலும் நம்மை ஆட்சி செய்ய நினைத்தவர்கள் தோற்றுவிட்டனர். இந்த நாள் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் தோல்வியடைந்த நாளாக அமைந்துவிட்டது என்றார்.

முன்னதாக, 2012-ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய சஞ்சய் நிருபம், தொலைக்காட்சிகளில் ஆடுவதற்காக பணம் பெற்று வந்த நீங்கள், இப்போது தேர்தல் விவாதத்தில் பங்கெடுத்து பேசி வருகிறீர்கள் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com