கர்நாடகாவைத் தொடர்ந்து அமித் ஷாவின் அடுத்த இலக்கு இது தான்

கர்நாடகா தேர்தலை முடிந்து பாஜகவின் அடுத்த பார்வை தெலங்கானா மீது இருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் கே.லக்ஷ்மன் தெரிவித்தார்.
கர்நாடகாவைத் தொடர்ந்து அமித் ஷாவின் அடுத்த இலக்கு இது தான்

கர்நாடகா தேர்தல் பணிகள் முடிந்ததை அடுத்து பாஜகவின் அடுத்த பார்வை தெலங்கானா மீது இருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் கே.லக்ஷ்மன் தெரிவித்தார். 

கர்நாடக அரசியலில் பரபரப்பான பல திருப்புமுனைகளுக்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாகவே செய்த எடியூரப்பாவின் ராஜிநாமாவால் அரசியல் புயல் நேற்றுடன் கரை கடந்தது. இதைத்தொடர்ந்து, பாஜகவின் அடுத்த இலக்கு தெலங்கானாவை நோக்கி நகர்ந்துள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் கே லக்ஷ்மன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது,

" தில்லியில் அமித் ஷா தலைமையிலான கூட்டம் அண்மையில் நடந்தது. அவர் தெலங்கானாவை நோக்கி இருக்கிறார். மற்ற மாநிலங்களில் தேர்தல்கள் முடிந்துவிட்டது. தற்போது தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், ஒரிசா ஆகிய மாநிலங்கள் மீது கவனம் இருக்கிறது. 

தெலங்கானாவின் அரசியல் சூழ்நிலை மற்றும் தேர்தல் குறித்து திட்டம் தீட்டுவதற்காக அடுத்த மாதம் வருகை தர இருக்கிறார். 119 தொகுதிகளில் 40 முதல் 50 தொகுதிகளில் 'பன்னா பிரமுக்ஸ்' (வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தல்) திட்டம் நிறைவடைந்துவிட்டது. மீதமுள்ள தொகுதிகளிலும் இது இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும். 

தெலங்கானாவுக்கு மத்திய அரசு நெடுஞ்சாலை, ரயில்வே திட்டங்கள், இலவச சமையல் எரிவாயூ திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியது போன்ற மோடி அரசின் சாதனையை பாஜகவின் மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளனர்.  

அதே சமயம் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் வேலை வாய்ப்பு, ஏழை மக்களுக்கு 2 படுக்கை அறை கொண்ட வீடு, தலித் மக்களுக்கு 3 ஏக்கர் நிலம் என தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததையும் எடுத்து கூற இருக்கிறோம்.

பாஜக, சமூகத்தின் அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி எஸ்சி, பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் இளைஞர்கள் என பல பிரிவுகளுக்கான சரியான தேர்தல் அறிக்கையுடன் களமிறங்கும்.      

பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் பிஹார் அமைச்சர் மங்கள் பாண்டே ஆகியோருக்கு மாநிலத்தில் உள்ள 17 நாடாளுமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்றார்.

தெலங்கானாவில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com