பசுவதை செய்ததாகக் கூறி தாக்குதல் - மத்திய பிரதேசத்தில் ஒருவர் பலி

மத்திய பிரதேசத்தின் சாட்னா மாவட்டத்தில் பசுவதை செய்ததாகக் கூறி 2 பேர் மீது நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய பிரதேசத்தின் சாட்னா மாவட்டத்தில் பசுவதை செய்ததாகக் கூறி 2 பேர் மீது நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார்.

மத்திய பிரதேச சாட்னா மாவட்ட, சாட்னா - கட்னி சாலையில்  2 நபர்கள் திரைப்படம் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது சிறுகுன்று அருகில் ரியாஸ், டாக்ஸி ஓட்டுநர் ஷாகீல், ஸாகி மற்றும் இஸ்மாயில் ஆகிய 4 பேரை அவர்கள் பசுவுடன் பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அருகில் உள்ள கிராம மக்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். 

இதையறிந்து அந்த இடத்துக்கு விரைந்த கிராம மக்கள் சிலர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது, ஸாகி மற்றும் இஸ்மாயில் என்பவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர், ரியாஸ் மற்றும் ஷாகீல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை காலை 3 மணி அளவில் அவசர அழைப்பு எண் 100 மூலமாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் காளை மாடுகளின் தலை, மாட்டுக்கறி போன்றவற்றை பார்த்து அவற்றை அங்கிருந்து கைப்பற்றினர். மேலும், ரியாஸ் மற்றும் ஷாகீல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

அதில், ரியாஸ் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஷாகீலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   

இந்த விவகாரத்தில், ஷாகீல் அளித்த புகாரின் அடிப்படையில் பவன் சிங் கோன்ட், விஜய் சிங் கோன்ட், ஃபூல் சிங் கோன்ட் மற்றும் நாராயண் சிங் கோன்ட் ஆகிய நால்வரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். இவர்கள் மீது குற்றவியல் பிரிவு 302, 307 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதமன்ற காவலுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.  

மேலும், கைது செய்யப்பட்ட பவன் சிங் கோன்ட் அளித்த புகாரின் பேரில், தாக்கப்பட்ட இருவர் மீது மத்திய பிரதேச பசுவதை தடுப்புச் சட்டம் மற்றும் கால்நடை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  
 
ஏதேட்சையாக, பசுவதையை கடுமையாக எதிர்ப்பவர்களுள் முக்கியமானவராக கருதப்படும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தாக்குதல் நடந்த இதே சாட்னா மாவட்டத்துக்கு இன்று வருகை தருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com