ஊழல் அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்துக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

இந்தியாவில் அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதில் அதிகம் ஊழல் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்திலும்,
ஊழல் அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்துக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

இந்தியாவில் அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதில் அதிகம் ஊழல் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்திலும், தெலங்கானா இரண்டாவது இடத்திலும், ஆந்திரா நான்காவது இடத்திலும் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சி.எம்.எஸ். இந்தியா என்ற தனியார் நிறுவனம் ஒன்று, "ஊழல் ஆய்வு 2018" என்ற தலைப்பில் பல்வேறு மாநிலங்களில் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் 12 வது சுற்று அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் அரசு சேவைகளை பெறுவதில் பொதுமக்களிடம் பெறப்படும் லஞ்சம் குறித்து  குறித்து வெவ்வேறு துணை குறியீடுகள் பயன்படுத்தப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மாநிலங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 

அதன் அடிப்படையில், அரசு சேவைகளை பெறுவதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவது தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது. 2-வது இடத்தில் தெலங்கானா, 4-வது இடத்தில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பஞ்சாப், குஜராத் மாநிலங்களிலும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மிக மோசமாகவே உள்ளதாகவும், ஊழல் எதிரான நடவடிக்கைகளில் ராஜஸ்தான், கா்நாடகா, தில்லி ஆகிய மாநிலங்கள் ஓரளவு கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தில்லி, குஜராத், பிகார், தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஊழலுக்கு எதிராக போராடு வருவதாகவும், தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை இன்னும் சிறப்பாக அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் நடத்தப்பட்ட ஆய்வில், கடந்த ஆண்டு அரசு சேவையை பெறுவதற்காக அதிகாரிகளுக்கு 73 சதவீத குடும்பங்கள் லஞ்சம் கொடுத்ததாகவும், கடந்த ஆண்டின் இதே காலத்தில் ஒட்டுமொத்தமாகவே, 75 சதவீத குடும்பங்கள் லஞ்சம் கொடுப்பதும், லஞ்சம் பெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து, காவல்துறை, வீட்டுவசதி, நிலப் பதிவுகள், சுகாதாரம் மற்றும் மருத்துவமனை போன்ற துறைகளில் சேவைகளை பெறுவதில் ஊழல் நிறைந்த காணப்படுகின்றன. ஆதார் அட்டை பெறுவதற்காக 7 சதவீதம் பேரும், வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதற்காக 3 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர். 

குறிப்பாக "ஓட்டுநர் உரிமம் பெறவும், புதுப்பிக்கவும், புகார் பதிவு செய்தல், முதல் தகவல் அறிக்கை(எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்தல், குடும்பை அட்டை (ரேஷன் கார்டு), அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சேர்க்கவும், பள்ளி சேர்க்கை பெற மற்றும் சான்றிதழ்களில் திருத்தம் செய்வது போன்ற சேவைகளுக்கு லஞ்சம் பெறப்பட்டுள்ளது. 

தெலங்கானாவில், 40 சதவீதம் பேர் மத்திய அரசின் சேவைகளில் ஊழலை கட்டுப்படுத்துவதில் உறுதியுடன் உள்ளனர், ஆனால், ஆந்திராவில், மத்திய அரசின் சேவைகளில் ஊழலை குறைப்பதில் மக்கள் குறைவாக நம்பிக்கை வைத்துள்ளனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com