உ.பி.: விஷச்சாராய பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு

உத்தரப் பிரதேசத்தில் விஷச்சாரயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் விஷச்சாரயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கான்பூர், கான்பூர் தேகாத் மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை விஷச் சாராயம் குடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கண்பார்வை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை மேலும் 6 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 16 பேரில் இருவர் திங்கள்கிழமை உயிரிழந்தனர். இதனால் விஷச் சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் இருவர் சமாஜவாதி கட்சி முன்னாள் எம்எல்ஏவின் பேரன்கள் ஆவர். இதுதவிர அந்த முன்னாள் எம்எல்ஏவை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த மாநில அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்த 12 பேரும், உத்தரப் பிரதேச அரசு நடத்தும் மதுபானக் கடையில் இருந்து மதுபானம் வாங்கி அருந்தியுள்ளனர். மதுபான கடை ஒப்பந்ததாரர் மீது கான்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com