கர்நாடக மக்கள் காங்கிரஸூக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர்: அமித் ஷா

கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
கர்நாடக மக்கள் காங்கிரஸூக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர்: அமித் ஷா

கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
கர்நாடகத்தில் தாங்கள் அடைந்த படுதோல்வியைக் கூட வெற்றியாகக் கருதி காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ந்து வருவது வேடிக்கையாக இருக்கிறது. இதன் மூலம் தோல்வியை மறைப்பதற்கு அவர்கள் புதிய வழியைக் கண்டறிந்துள்ளனர்.
காங்கிரûஸச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். அவர்கள் எதனால் தோற்றனர் என்பதை காங்கிரஸ் தலைமையால் விளக்க முடியுமா? கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பது அமைச்சர்கள் அடைந்த தோல்விகள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
தாங்கள் ஆட்சி அமைப்பதை நினைத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் } காங்கிரஸ் கூட்டணி வேண்டுமானால் மகிழ்ச்சியடையலாம். கர்நாடக மக்கள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். பாஜக கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்காவிட்டால், அது மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிரானதாக அமைந்திருக்கும். ஏனெனில், பாஜகதான் கர்நாடகத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இந்தியாவில் அரசமைப்புச் சட்ட அமைப்புகள் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி வந்த காங்கிரஸ், இப்போது உச்ச நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும், அதன் வாக்குப் பதிவு இயந்திரத்தையும் நம்பத் தொடங்கியுள்ளது. கர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பா 7 நாள்கள் அவகாசம் கேட்டதாக காங்கிரஸ் வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் கூறியது பொய்யான தகவல் என்றார் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com