திரிபுராவில் வெள்ளம்: 25,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

மேற்கு திரிபுராவில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேற்கு திரிபுராவில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
தலைநகர் அகர்தலாவில் பாயும் ஹெüரா நதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி ஓடுவதால் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேற்கு திரிபுராவில் கோமதி, கோவாய் நதிகளில் ஏற்பட்ட வெள்ளம் பல கிராமங்களைச் சூழ்ந்துள்ளது. இதனால், வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகளில் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. பல குழந்தைகளும் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவர்களுக்காக பால் எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர மருத்துவர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட முகாம்களையும் வெள்ளம் நெருங்கியதால் உதய்பூர், சோனாமுரா நகரங்களுக்கு மக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
திரிபுரா மலைப் பகுதி என்பதால் கன மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துவிட்டனர். 24}க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com