நம்பிக்கை வாக்கெடுப்பில் பின்னடைவு: தொண்டர்கள் துவண்டுவிடக் கூடாது: எடியூரப்பா

நம்பிக்கை வாக்கெடுப்பில் பின்னடைவு ஏற்பட்டதால், கட்சித் தொண்டர்கள் துவண்டுவிடக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பின்னடைவு: தொண்டர்கள் துவண்டுவிடக் கூடாது: எடியூரப்பா

நம்பிக்கை வாக்கெடுப்பில் பின்னடைவு ஏற்பட்டதால், கட்சித் தொண்டர்கள் துவண்டுவிடக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடையவில்லை. காங்கிரஸ் கட்சியை புறக்கணித்த மக்கள், பாஜகவை 40 தொகுதிகளிருந்து 104 தொகுதிகள் வரை வெற்றி பெறச் செய்துள்ளனர். சந்தர்ப்பவாத கூட்டணியால், பாஜகவுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் பின்னடைவு ஏற்பட்டது. இதற்காக கட்சித் தொண்டர்கள் துவண்டுவிடக் கூடாது. நானும் கட்சியைப் பலப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன். நடைபெற உள்ள ஆசிரியர் தொகுதி சட்டமேலவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவினர் தயாராக வேண்டும். அதில் பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்த கட்சியின் வேட்பாளர்களுடன் வரும் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன். அப்போது, எந்தெந்த தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின் தோல்விக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆராயப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com