நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு

நிபா வைரஸ் தாக்கத்தினால் கேரள மாநிலத்தில் 15 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில்
நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு

நிபா வைரஸ் தாக்கத்தினால் கேரள மாநிலத்தில் 15 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு 15 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரி புனே ஆய்வகத்தில் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பட்டு ஆய்வு செய்ததில் 3 பேருக்கு நிபா வைரஸ் தாக்குதல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா உறுதிப்படுத்தியுள்ளார். 

பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் கோழிக்கோடு மாவட்டத்திலும், 4 பேர் மலப்புரம் மாவட்டத்திலும் உயிரிழந்துள்ளனர். கோழிக்கோடு மாவட்டத்தில் பெரம்பரா பகுதியில் சங்கரோத் கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 3 உயிரிழந்துள்ளனர். கோழிக்கோட்டில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரம்பரா தாலுகா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த செவிலியர் ஒருவர் உயிரிழந்தார்.

நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 10-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேகமாக பரவி வரும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் அம்மாநில மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்திலும் நிபா வைரஸ் தொடர்பான பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து கண்காணிப்புப் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து எந்த புகாரும் வரவில்லை. எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் நிபா வைரஸ் தொடர்பான எச்சரிக்கை அனைத்துத் துறையினருக்கும் விடுக்கப்பட்டுள்ளது. மூளைக் காய்ச்சல், சாதாரண காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டோரைக் கண்காணிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நிபா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உத்தரவின்பேரில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவக் குழு ஒன்று நிபா வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்த கேரள அரசுக்கு உதவுவதற்காகவும் நோய் எவ்வாறு பரவியது என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காகவும் கேரளத்திற்கு விரைந்து வந்துள்ளது.

இதனிடையே, மணிப்பால் வைரஸ் ஆய்வு மையத்தை சேர்ந்த அருண்குமார், நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

குடியிருப்பு பகுதிகளில் உள்ள கிணறுகளில் வசிக்கும் வெளவால்களின் மூலம் வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

கால்நடைத்துறை மற்றும் வனத்துறை பணியாளர்கள் உதவியுடன் வெளவால்கள் பிடிக்கப்பட்டு, சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

நிபா வைரஸ் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com