மேற்கு வங்கத்தில் மதவாதத்துக்கு இடமில்லை: மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் மதவாதத்துக்கு இடமில்லை என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மதவாதத்துக்கு இடமில்லை: மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் மதவாதத்துக்கு இடமில்லை என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உலக பன்முக கலாசார தினத்தை முன்னிட்டு சுட்டுரையில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையில் மேற்கு வங்கம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. மதவாதத்துக்கு மேற்கு வங்கத்தில் சிறிதும் இடமில்லை.
மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மத மோதல்கள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், அவை எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் நிகழ்ந்த சிறு சம்பவங்கள்தான். மாநில மக்கள் எப்போதும் மதவாதத்துக்கு தங்கள் மனதில் இடம் கொடுத்ததில்லை. பல்வேறு மதம், இனங்களைச் சேர்ந்த மக்கள் மேற்கு வங்கத்தில் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை.
சில இடங்களில் பாஜகவின் தூண்டுதலின் பேரில் மதவாதம் எழுகிறது. ஆனால், அதனை மாநில அரசு முற்றிலுமாக ஒடுக்கும்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் நாட்டில் ஏற்படும் மதவாத பிரச்னைகள் குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் தாக்கல் செய்தார். அதில், கடந்த 3 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் மதவாத வன்முறைகள் மிகவும் அதிகரித்துள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் மம்தா கருத்துத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com