எடியூரப்பா, ஸ்ரீராமுலுவின் ராஜிநாமாவை ஏற்றார் மக்களவைத் தலைவர்

எம்.பி. பதவியிலிருந்து பாஜக மூத்த தலைவர்கள் எடியூரப்பா, ஸ்ரீராமுலு ஆகியோர் ராஜிநாமா செய்ததை, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்டார்.

எம்.பி. பதவியிலிருந்து பாஜக மூத்த தலைவர்கள் எடியூரப்பா, ஸ்ரீராமுலு ஆகியோர் ராஜிநாமா செய்ததை, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்டார்.
ஷிமோகா மக்களவை தொகுதி எம்.பி.யாக எடியூரப்பாவும், பெல்லாரி தொகுதி எம்.பி.யாக ஸ்ரீராமுலுவும் இருந்தனர். இதனிடையே, கர்நாடக சட்டப் பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அத்தேர்தலில் போட்டியிட ஏதுவாக அவர்கள் இருவரும் தங்களது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வது தொடர்பான கடிதத்தை மக்களவைத் தலைவரிடம் அளித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எடியூரப்பாவும், ஸ்ரீராமுலுவும் வெற்றி பெற்றனர். எனினும், கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாததால், அக்கட்சியால் மாநிலத்தில் ஆட்சியமைக்க முடியவில்லை. கர்நாடக முதல்வராக முதலில் பதவியேற்ற எடியூரப்பா, பின்னர் 3 நாள்கள் கழித்து அந்தப் பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில், ஷிமோகா தொகுதி எம்.பி. பதவியை எடியூரப்பா ராஜிநாமா செய்ததையும், பெல்லாரி தொகுதி எம்.பி. பதவியை ஸ்ரீராமுலு ராஜிநாமா செய்ததையும் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்டார். இந்தத் தகவலை மக்களவைச் செய
லக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு அழைப்பு: முன்னதாக, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்துக்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வரபிரசாத் ராவ், ஒய்.வி. சுப்பா ரெட்டி, மிதுன் ரெட்டி, அவினாஷ் ரெட்டி, மேகபதி ராஜமோகன் ரெட்டி ஆகிய 5 பேர் தங்களது எம்.பி. பதவிகளை ராஜிநாமா செய்வது தொடர்பான கடிதத்தை சுமித்ரா மகாஜனிடம் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி அளித்திருந்தனர். அவர்கள் அனைவரையும் வரும் 29ஆம் தேதி தம்மை வந்து சந்திக்கும்படி மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அழைத்துள்ளார்.
இதுகுறித்து மிதுன் ரெட்டி கூறுகையில், "பதவிகளை ராஜிநாமா செய்த எம்.பி.க்களை, ஆலோசனை நடத்த வருமாறு அவைத் தலைவர் அழைப்பு விடுக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. எங்களது விளக்கத்தை அவர் ஏற்கும்பட்சத்தில், ராஜிநாமாவை ஏற்பார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com