ஒப்பந்த அடிப்படையில் விவசாயம்: மாதிரி சட்டத்தை வெளியிட்டார் மத்திய வேளாண் அமைச்சர்

உற்பத்தி பொருள்களின் விலை ஏற்ற, இறக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் தவிர்க்கும் நோக்கில் விவசாய ஒப்பந்த சட்ட மாதிரியை மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் வெளியிட்டார்.

உற்பத்தி பொருள்களின் விலை ஏற்ற, இறக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் தவிர்க்கும் நோக்கில் விவசாய ஒப்பந்த சட்ட மாதிரியை மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் வெளியிட்டார்.
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த மாதிரிச் சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் ராதா மோகன் சிங், இந்த மாதிரிச் சட்டத்தை வெளியிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த மாதிரிச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, அனைத்து மாநில அரசுகளும் அதை அமல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, வேளாண் பொருள்கள் விற்பனை உள்பட பல்வேறு விவகாரங்களில் உரிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்றார் ராதா மோகன் சிங்.
இந்த நிகழ்ச்சியில் 12-க்கும் மேற்பட்ட மாநில வேளாண் துறை அமைச்சர்களும், அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர். கால்நடைகள், பால் பொருள்கள் விற்பனையையும் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள இந்தச் சட்டம் வழிவகை செய்யும்.
இந்தச் சட்டத்தின்மூலம், தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வரும். அப்போது, ஒப்பந்தம் செய்துகொள்ள ஏற்படும் போட்டியால் அவற்றின் மதிப்பு உயரும். இதனால், உரிய லாபத்தை விவசாயிகளால் அடைய முடியும்.
கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த மாதிரி சட்டம் ஏற்கெனவே சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com