தமிழகத்துக்கு 20 ரேக் நிலக்கரி ஒதுக்க பியூஷ் கோயல் நடவடிக்கை

தமிழக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்திக்குத் தேவையான 20 ரேக்குகள் நிலக்கரியை ஒதுக்க மத்திய நிலக்கரி, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக மின்சாரம், மதுவிலக்கு
தில்லியில்  மத்திய  அமைச்சர்  பியூஷ்  கோயலை சந்தித்த  தமிழக  மின்சாரத் துறை  அமைச்சர்  பி.  தங்கமணி. உடன்  தமிழக  மின்  உற்பத்தி  மற்றும்  பகிர்மானக் கழகத் தலைவர்  விக்ரம்  கபூர். 
தில்லியில்  மத்திய  அமைச்சர்  பியூஷ்  கோயலை சந்தித்த  தமிழக  மின்சாரத் துறை  அமைச்சர்  பி.  தங்கமணி. உடன்  தமிழக  மின்  உற்பத்தி  மற்றும்  பகிர்மானக் கழகத் தலைவர்  விக்ரம்  கபூர். 

தமிழக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்திக்குத் தேவையான 20 ரேக்குகள் நிலக்கரியை ஒதுக்க மத்திய நிலக்கரி, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
இது தொடர்பாக புது தில்லி ரயில் பவனில் உள்ள அலுவலகத்தில் அமைச்சர் பியூஷ் கோயலை தமிழக அமைச்சர் பி.தங்கமணி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தார். அப்போது, தமிழக அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். நிலக்கரி வழங்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தினமும் 16 ரயில் ரேக்குகள் மூலம் நிலக்கரி வழங்க வேண்டும். ஆனால், 13 ரயில் ரேக்குகள் நிலக்கரி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால், கூடுதலான நிலக்கரியை ஒதுக்குமாறு வலியுறுத்தப்பட்டது. மேலும், வட சென்னை அனல் மின்நிலையம் நிலை - 2, மேட்டூர் அனல் மின் நிலையம் நிலை-1 ஆகியவற்றில் முழு கொள்ளளவு மின் உற்பத்திக்கு உரிய நிலக்கரியை ஒதுக்கீடு செய்யுமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி. தங்கமணி கூறியதாவது: தமிழக முதல்வரின் அறிவுரையின் பேரில், மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தோம். தமிழகத்துக்கு தினமும் அனல் மின் உற்பத்திகு 75 ஆயிரம் டன் நிலக்கரி தேவையாக உள்ளது. தற்போது 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே ரேக்குகளில் வந்து கொண்டிருக்கிறது. இதை முழு அளவில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
அப்போது, உடனடியாக ரயில்வே அதிகாரிகளை வரவழைத்து 20 ரேக்குகள் நிலக்கரியை உடனடியாக தமிழகத்துக்கு ஒதுக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டார். தமிழகத்தின் கோரிக்கையை ஏற்ற அமைச்சருக்கு தமிழக முதல்வரின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழகத்துக்குத் தேவையான நிலக்கரியை அளிக்கவும், எதிர்காலத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை உனடியாக அளிப்பதற்கும் பரிசீலிப்பதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தாôர் என்றார் அமைச்சர் தங்கமணி.
ஸ்டெர்லைட் விவகாரம்: செய்தியாளர்கள் சந்திப்பின்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட வன்முறை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் தங்கமணி, "தமிழக மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மக்களின் எண்ணம்தான் அரசின் எண்ணம் ஆகும். மக்களின் எண்ணத்திற்கு மாறாக இந்த அரசு எப்போதும் செயல்படாது' என்றார்.
மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்குடன்சந்திப்பு: பின்னர், மாலையில் மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கை அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் கடல் காற்று சக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய முன்வரும் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு புதுப்பிக்கத்தக்க மரபுசாரா எரிசக்தித் துறையின் மூலம் சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com