திருமலையில் நேர ஒதுக்கீடு: கவுன்ட்டர்கள் தற்காலிகமாக மூடல்

ஏழுமலையானைத் தரிசிக்க 57 மணி நேரம் காத்திருக்க வேண்டி வருவதால், பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, திருமலையில் உள்ள தர்ம தரிசன பக்தர்களுக்கான நேர ஒதுக்கீடு கவுன்ட்டர்களை தேவஸ்தானம் தற்காலிகமாக

ஏழுமலையானைத் தரிசிக்க 57 மணி நேரம் காத்திருக்க வேண்டி வருவதால், பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, திருமலையில் உள்ள தர்ம தரிசன பக்தர்களுக்கான நேர ஒதுக்கீடு கவுன்ட்டர்களை தேவஸ்தானம் தற்காலிகமாக மூடியுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு கூறியதாவது: திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களின் வசதிக்காக தேவஸ்தானம் நேர ஒதுக்கீடு முறையை 
அமல்படுத்தியது.
மே 3-ஆம் தேதி இம்முறை முழுமையாக அமலுக்கு வந்தது. அன்று முதல் இன்று வரை 5 லட்சத்து 43 ஆயிரத்து 308 தரிசன டோக்கன்கள் அளிக்கப்பட்டுள்ளன. 
ஆனால் அதைப் பயன்படுத்தி, 4 லட்சத்து 2 ஆயிரத்து 11 பேர் மட்டுமே ஏழுமலையானைத் தரிசனம் செய்துள்ளனர். மேலும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், 57 மணி நேரத்துக்குப் பின் தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. 
எனவே ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் 3 நாள்கள் காத்திருக்க வேண்டி வருவதால், தேவஸ்தானம் திருமலையில் உள்ள நேர ஒதுக்கீடு கவுன்ட்டர்களை தற்காலிகமாக மூடியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com