பாகிஸ்தான் தாக்குதலால் பீதி: முகாம்களில் மக்கள் தஞ்சம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், எல்லையை ஒட்டிய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் படையினர் துப்பாக்கியால் சுட்டும், இடைவிடாது கொத்துக்குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அர்னியா கிராமத்தில் பாகிஸ்தான் படையினரால் வீசப்பட்ட கொத்துக்குண்டுகளால் துளையிடப்பட்டுள்ள சுவர் பகுதிகள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அர்னியா கிராமத்தில் பாகிஸ்தான் படையினரால் வீசப்பட்ட கொத்துக்குண்டுகளால் துளையிடப்பட்டுள்ள சுவர் பகுதிகள்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், எல்லையை ஒட்டிய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் படையினர் துப்பாக்கியால் சுட்டும், இடைவிடாது கொத்துக்குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
குடியிருப்பு பகுதிகளில் கொத்துக்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதனால், அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி அரசு முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் 70 வயது மூதாட்டி உள்பட ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டி அமைந்துள்ள அக்னூர் முதல் சம்பா வரையிலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பாகிஸ்தான் படையினர் இடைவிடாது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் படையினர் கொத்துக்குண்டுகளை வைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தியதன் விளைவாக குடியிருப்பு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஜம்மு மாநகர காவல் ஆணையர் எஸ்.டி.சிங் ஜாம்வால் கூறியதாவது:
அர்னியா பகுதிக்கு உள்பட்ட பிண்டி சாக்ரான் கிராமத்தில், பாகிஸ்தான் படையினர் வீசிய கொத்துக்குண்டு வீடு ஒன்றின் மேல் விழுந்தது. இதில், அந்த வீட்டில் குடியிருந்த மதன் லால் பகத் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதேபோன்று கெளசல்யா தேவி என்ற 70 வயது மூதாட்டிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சேதம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர் என்றார் அவர். 
பாகிஸ்தான் படையினர் செவ்வாய்க்கிழமை மட்டுமல்லாது அதற்கு முன்னரும் தாக்குதல் நடத்தியதில் மிகுந்த பாதிப்புக்குள்ளான ஆர்.எஸ்.புரா மற்றும் அர்னியா பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு கட்டடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இந்த இரு மாவட்டங்களில்
3 பேர் காயமடைந்துள்ளனர்.
தொடர்கதையாகும் தாக்குதல்: பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ மேற்கொண்ட இரண்டு முயற்சிகளை இந்திய ராணுவம் அண்மையில் வெற்றிகரமாக முறியடித்தது. இதையடுத்து, கடந்த 15-ஆம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகியுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் மட்டும் இதுவரை ராணுவ வீரர்கள் இருவர் உள்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம், பாகிஸ்தான் ராணுவத்தால் இந்த ஆண்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 39-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com