பிஎன்பி முறைகேடு வழக்கு: மெஹுல் சோக்ஸிக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.12,636 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை மும்பையில் உள்ள

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.12,636 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளது.
மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட 2ஆவது குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது. அந்த குற்றப்பத்திரிகையில், ரூ.7,080 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. குற்றப்பத்திரிகையில் வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, பிஎன்பி வங்கி முன்னாள் நிர்வாக இயக்குநர் உஷா அனந்த சுப்பிரமணியன், பிஎன்பி வங்கி நிர்வாகிகள் பிரமாஜி ராவ், சஞ்சீவ் சரண், துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இதையடுத்து, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மெஹுல் சோக்ஸிக்கு எதிராக நீதிமன்றத்தால் பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து சிபிஐ அதிகாரி கூறுகையில், "நீதிமன்றத்தால் பிணையில் வெளி வர முடியாத வாரண்ட் உத்தரவு வெளியிடப்பட்டிருப்பதால், இன்டர்போல் அமைப்பை அணுகி, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, நீரவின் சகோதரர் நிஷால், நீரவ் மோடி நிறுவன அதிகாரி சுபாஷ் ஆகியோருக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது' என்றார்.
முன்னதாக, நீரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால், சுபாஷ் ஆகியோருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை மும்பை சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com