எத்தனை கோயில்கள், எத்தனை சுவாமிகள்.. குமாராசாமியின் இடைவிடாத ஆன்மீக டூர்

கர்நாடகாவின் முதல்வர் பதவி கிடைத்ததை அடுத்து குமாரசாமி பல கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார்.
எத்தனை கோயில்கள், எத்தனை சுவாமிகள்.. குமாராசாமியின் இடைவிடாத ஆன்மீக டூர்

நீண்ட இழுபறிக்குப் பிறகு கர்நாடகாவின் முதல்வராக குமாரசாமி நேற்று (புதன்கிழமை) பொறுப்பேற்றார். 

முன்னதாக, 2 நாட்கள் முதல்வர் பதவி வகித்த பாஜகவின் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக ராஜிநாமா செய்தார். இந்த ராஜிநாமாவின் போதே காங்கிரஸ் ஆதரவுடன் பெரும்பான்மை உள்ளதால் மஜதவின் குமாரசாமி அதிகாரப்பூர்வமற்ற வகையில் முதல்வர் ஆகிவிட்டார்.

இதையடுத்து, அவர் தொடர்ச்சியாக பல கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வருகிறார். எடியூரப்பா ராஜிநாமா செய்தது முதல் தற்போது வரை குமாரசாமி சென்ற கோயில் மற்றும் சுவாமிகளை சந்தித்த விவரம்:

  • எடியூரப்பா ராஜிநாமா செய்த சனிக்கிழமை அன்றே, விஜயநகர் நிர்மலநந்தநாத சுவாமி கோயிலுக்கு சென்றார்.      
  • ஞாயிற்றுக்கிழமை திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். 
  • திங்கள்கிழமை ஹோலேநரசிபுரா ஹசன் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மி நரசிம்மா கோயில் மற்றும் சிவன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். 
  • ஸ்ரீரின்கேரியில் உள்ள சாரதாம்பா கோயிலுக்கு செவ்வாய்கிழமை சென்றார். அவர், தேர்தலுக்கு முன்பாக இந்த கோயிலில் தான் ஆதி ருத்ர மகா யாகம் நடத்தினார். அதனால், அவர் முதல்வர் பதவியேற்பதற்கு முன் இந்த கோயிலுக்கு சென்றார்.
  • செவ்வாய்கிழமை அன்றே அவர் அவர் தர்மஸ்தலா மஞ்சுநாதசுவாமி கோயிலுக்கும் சென்று தரிசனம் பெற்றார். 
  • பின்னர், புதன்கிழமையன்று கர்நாடகாவின் முதல்வராக அவர் பதவியேற்றார். இதை முன்னிட்டு பதவியேற்பதற்கு முன்னதாக மைசூரு சாமுண்டேஸ்வரி கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தார். அவர், இதைத்தொடர்ந்து தனது தாய், தந்தையையும் நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்ற பிறகு தான் பதவியேற்பு விழாவுக்கு சென்றார். 
  • பதவியேற்பதற்கு முன்பு கோயில்களுக்கு சென்று வழிபட்டு வந்த குமாரசாமி பதவியேற்ற பிறகு சுவாமிகளை சந்தித்து வருகிறார். 
  • நேற்று வியாழக்கிழமை பட்டநாயகனஹாலி மட்டில் இருக்கும் நன்ஜவாதூடா சுவாமிகளை சந்தித்து பேசினார். 
  • இதைத்தொடர்ந்து, இன்று காலை ஸ்ரீ சிவகுமார சுவாமியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். 

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாரசாமியின் ஆன்மீக சுற்றுலா நீண்டு கொண்டே இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com