தரமான மருத்துவ வசதி கிடைக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு 145 ஆவது இடம்

தரமான மருத்துவ வசதி கிடைக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு 145 ஆவது இடம்

சர்வதேச அளவில் தரமான மருத்துவ வசதி கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 145 ஆவது இடமே கிடைத்துள்ளது. மொத்தம் 195 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

சர்வதேச அளவில் தரமான மருத்துவ வசதி கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 145 ஆவது இடமே கிடைத்துள்ளது. மொத்தம் 195 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
சர்வதேச அளவில் மருத்துவ வசதி எந்தெந்த நாடுகளில் சிறப்பாகவும், தரமாகவும் உள்ளது. மக்கள் எளிதாக அணுகும் வகையிலும் மருத்துவ வசதி கிடைத்து வருகிறதா? என்பது குறித்து சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1990-ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் மருத்துவ வசதி அதிகரித்து வருகிறது. 1990-ஆம் ஆண்டில் இந்தியாவில் மருத்துவ வசதியின் தரம் 24.7 சதவீதமாக இருந்தது. 2016-ஆம் ஆண்டில் அது 41.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் 2000 முதல் 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் மருத்துவத் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளம், கோவா ஆகிய மாநிலங்களில் மருத்துவ சேவை சிறப்பாக உள்ளது. 
உத்தரப் பிரதேசம், அஸ்ஸாமில் மருத்துவ வசதிகள் மோசமாக உள்ளன.
எனினும், சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு 145 ஆவது இடமே கிடைத்துள்ளது. இதில் அண்டை நாடுகளான சீனா (48 ஆவது இடம்), இலங்கை (71), வங்கதேசம் (133), பூடான் (134) ஆகியவை இந்தியாவைவிட முன்னணியில் உள்ளன. ஆனால் பாகிஸ்தான் (154), நேபாளம் (149), ஆப்கானிஸ்தான் (191) ஆகியவை இந்தியாவை விடப் பின்தங்கியுள்ளன.
மக்கள் எளிதாக மருத்துவ சேவையை அணுக வசதியுள்ள நாடுகள் மற்றும் தரமான மருத்துவ சேவை அளிக்கும் நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து, நார்வே, நெதர்லாந்து, லக்ஸம்பர்க், பின்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்நிலையில் உள்ளன.
இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய்கள், புற்றுநோய் ஆகியவை இந்திய மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாக விளங்கி வருகின்றன. இந்த நோய்களை எதிர்கொண்டு தீர்ப்பதில் இந்தியா இப்போது தடுமாற்றத்துடனேயே செயல்பட்டு வருகிறது.
மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சோமாலியா, சாட், கினியா ஆகியவை மருத்துவ சேவையில் மிகவும் பின்தங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com