எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த ராஜ்நாத் உத்தரவு

சர்வதேச எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு துணை ராணுவப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த ராஜ்நாத் உத்தரவு

சர்வதேச எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு துணை ராணுவப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். காஷ்மீரை ஒட்டியுள்ள எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்துவதும், அங்கிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவுவதும் அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இதனிடையே, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில், 
தற்போது அங்கு நிலவும் சூழல்கள் குறித்தும் ராஜ்நாத் சிங் ஆய்வு 
செய்தார்.
தில்லியில் உள்துறை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவப் படை உயரதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. எல்லையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், அக்கூட்டத்தில் அதுதொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 
குறிப்பாக, ஜம்மு - காஷ்மீரை ஒட்டியுள்ள எல்லையில் கடந்த சில நாள்களாக பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் எல்லையோர கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் வேலிகள் அமைக்கும் பணிகள் குறித்து அதிகாரிகள் ராஜ்நாத் சிங்கிடம் விளக்கிக் கூறினர். அப்போது சில முக்கிய அறிவுறுத்தல்களை அவர்களுக்கு மத்திய அமைச்சர் வழங்கினார்.
மேலும், காஷ்மீர் மாநிலத்தில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்தும், அதன் பின்னர் மாநிலத்தில் நிலவி வரும் சூழல் குறித்தும் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.
எல்லை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும், எல்லையோர கிராமங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அப்போது அவர் உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com