பாரம்பரியத்தை மதித்து நடக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு

பாரம்பரியத்தை மதித்து நடக்க வேண்டும் என்று மிúஸாரம் பல்கலைக்கழக மாணவர்களிடம் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.
பாரம்பரியத்தை மதித்து நடக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு

பாரம்பரியத்தை மதித்து நடக்க வேண்டும் என்று மிúஸாரம் பல்கலைக்கழக மாணவர்களிடம் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.
குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக மிúஸாரம் சென்ற வெங்கய்ய நாயுடு, அங்கு மிúஸாரம் பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்ட நிர்வாகக் கட்டடத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கிருந்த மாணவர்களிடையே அவர் பேசியதாவது:
நாம் எப்போதும் நாட்டின் பாரம்பரியம் மற்றும் நடைமுறைகளை மதித்து நடக்க வேண்டும். அதேபோல், இதர மொழிகளை கற்றுக்கொள்வதற்கு முன்பாக, தாய்மொழியில் மிகச் சிறந்து விளங்க வேண்டும். 
நாட்டில் நகரம்-கிராமம் இடையேயான வேறுபாடுகளைக் களைய, ஏழ்மையையும், கல்வியறிவின்மையையும் போக்க வேண்டும்.
மிúஸாரம் பல்கலைக்கழகமானது, எதிர்வரும் காலத்தில் வடகிழக்கு மாநில மாணவர்களுக்கான முக்கியக் கல்வி மையமாக இருக்கும். ஒரு காலத்தில் செய்தித்தாள் விநியோகித்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பின்னர் நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்தார். ரயில்நிலைய நடைமேடையில் தேநீர் விற்ற நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக உயர்ந்தார்.
எனவே, கடினமாக உழைக்கும் எந்த மாணவர்களும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம். கடின உழைப்போடு அர்ப்பணிப்புடன் பயின்றால், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்று வெங்கய்ய நாயுடு கூறினார். 
இதனிடையே, மிúஸாரம் பல்கலைக்கழகத்தில் மாணவ-மாணவிகள் விடுதி கட்டுமான பணிக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com