பேருந்துகளின் வருகை நேரத்தை அறிய செயலி: தில்லி அரசு விரைவில் அறிமுகம்

பேருந்து நிறுத்தங்களில் இருந்தவாறே பேருந்துகளின் வருகை குறித்த நேரத்தை பயணிகள் தங்களது ஸ்மார்ட்போன்கள் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் புதிய வகையில் மாற்றம் செய்யப்பட்ட செயலியை
பேருந்துகளின் வருகை நேரத்தை அறிய செயலி: தில்லி அரசு விரைவில் அறிமுகம்

பேருந்து நிறுத்தங்களில் இருந்தவாறே பேருந்துகளின் வருகை குறித்த நேரத்தை பயணிகள் தங்களது ஸ்மார்ட்போன்கள் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் புதிய வகையில் மாற்றம் செய்யப்பட்ட செயலியை தில்லி அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்தார்.
தில்லியில் உள்ள நான்கு பேருந்து நிலையங்களில் விரிவான வரைபட வசதி முன்னோடித் திட்டத்தை அமைச்சர் கைலாஷ் கெலாட் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தில்லி அரசு ஏற்கெனவே பயணிகளின் வசதிக்காக "பூச்சோ' எனும் செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்தியிருந்தது. இன்னும் இரு வாரங்களில் இந்த செயலியானது புதுப்பிக்கப்பட்டு புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கூடுதல் அம்சங்களுடன் உள்ள இந்த செயலி அடுத்த இரு வாரங்களில் வெளியிடப்படும். பூச்சோ செயலி மூலம், ஒரு குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் இருந்தவாறு பயணிகள் பேருந்துகளின் சரியான வருகை நேரத்தை தெரிந்து கொள்ள முடியும்.
பூச்சோ செயலியை தில்லி ஒருங்கிணைந்த போக்குவரத்து நிறுவனம் (டிஎம்எம்ஐடிஎஸ்) உருவாக்கியுள்ளது.
இந்த செயலி மூலம் பேருந்துகளின் நிகழ்நேர இருப்பிடம் குறித்த தகவலையும், வழித்தடங்களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த வரைபட வசதிக்கான முன்னோடித் திட்டப் பணிகள் நிறைவடைந்த பிறகு அனைத்துப் பேருந்து நிறுத்தங்களிலும் இந்த வசதிஅளிக்கப்படும். பேருந்து பயணிகளுக்கான வசதியை அதிகரிக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது டிடிசி பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவிகளில் சில பிரச்னைகள் உள்ளன. இதன் காரணமாக, பேருந்துகளின் இருப்பிடம் அடிக்கடி கண்டறிய முடியாமல் போகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் அமைச்சர் கைலாஷ் கெலாட்.
இதுகுறித்து போக்குவரத்து துறையின் அதிகாரி கூறுகையில், " தில்லி வழித்தட வரைபடமானது லண்டன், நியூயார்க் மாநகரங்களில் உள்ளது போன்று சிறந்த வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com