மாநிலங்களுக்கிடையேயான "இ-வே பில்' மகாராஷ்டிரம், மணிப்பூரில் இன்று முதல் அமல்

மாநிலங்களுக்கு இடையே சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்வதற்கான இணைய வழி ரசீது (இ-வே பில்) நடைமுறை மணிப்பூர், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் 5 யூனியன் பிரதேசங்களிலும் முதல் அமலுக்கு வரவுள்ளது.
மாநிலங்களுக்கிடையேயான "இ-வே பில்' மகாராஷ்டிரம், மணிப்பூரில் இன்று முதல் அமல்

மாநிலங்களுக்கு இடையே சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்வதற்கான இணைய வழி ரசீது (இ-வே பில்) நடைமுறை மணிப்பூர், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் 5 யூனியன் பிரதேசங்களிலும் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளது.
இதன் மூலம் அந்த நடைமுறை அமலாகியுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 27-ஆக உயர உள்ளது.
ஜிஎஸ்டி வரம்புக்குட்பட்ட சரக்குகளை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதாவது, ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான மதிப்புடைய சரக்குகளை 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் விற்பனைக்கு கொண்டுசெல்ல வேண்டுமானால், "இ - வே பில்' எனப்படும் இணைய வழி சரக்கு போக்குவரத்து ரசீது பதிவு செய்வது கட்டாயம்.
முந்தைய நடைமுறைப்படி, குறிப்பிட்ட சரக்குகளை அனுப்பும்போது, அதை விற்பவர் மற்றும் பெறுபவரின் முகவரி, அவர்களது வரி பரிமாற்ற தகவல் எண் (டின் நம்பர்) உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ரசீதை மட்டும் அதனுடன் வைத்து அனுப்பினால் போதுமானது.
இதில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறி வரிஏய்ப்பு நடைபெற்றதால், அதனை சீராக்கும் வகையில் இணையவழி சரக்குப் போக்குவரத்து ரசீது முறையைக் கொண்டுவர ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது. அதன்படி, குறிப்பிட்ட இடத்துக்கு சரக்குகளை அனுப்புவதற்கு முன்பாகவே, அதுதொடர்பான விவரங்களை இணையவழி மூலமாக ஜிஎஸ்டி தளத்தில் சம்பந்தப்பட்ட விற்பனையாளர் பதிவு செய்ய வேண்டும். அல்லது குறுஞ்செய்தி வாயிலாகவும் அதனைப் பதிவு செய்து கொள்ளலாம். அதைத் தொடர்ந்து பிரத்யேக எண் ஒன்று வழங்கப்படும். அதைப் பெற்ற பிறகே சம்பந்தப்பட்ட சரக்குகளைக் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த நடைமுறையானது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. அப்போது மாநிலங்களுக்குள் மட்டுமே அது அறிமுகப்படுத்தப்பட்டது. 
இந்நிலையில், மாநிலங்களிடையேயும் இணையவழி ரசீது முறையைக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டது. 
அதன்படி, முதல்கட்டமாக 5 மாநிலங்களுக்கு இடையே ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அந்த முû அமலானது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களிடையே அந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், மகாராஷ்டிரம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களிலும், அந்தமான் நிகோபர், டையூ-டாமன், லட்சத்தீவுகள், தாத்ரா - நாகர்ஹவேலி, சண்டீகர் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் அந்த நடைமுறையானது வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இந்தத் தகவல்களை மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com