18,000 கிராமங்களை இருளில் வைத்திருந்தது ஏன்?: காங்கிரஸுக்கு பிரதமர் மோடி கேள்வி

நாடு விடுதலை அடைந்து பல ஆண்டுகளாக ஆட்சி செய்தும் 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்காமல் இருட்டில் வைத்திருந்தது ஏன்? என்று காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
18,000 கிராமங்களை இருளில் வைத்திருந்தது ஏன்?: காங்கிரஸுக்கு பிரதமர் மோடி கேள்வி

நாடு விடுதலை அடைந்து பல ஆண்டுகளாக ஆட்சி செய்தும் 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்காமல் இருட்டில் வைத்திருந்தது ஏன்? என்று காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்தக் கிராமங்களுக்கு தற்போது பாஜக ஆட்சியில் மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.27,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது:
நாடு விடுதலை அடைந்த பல ஆண்டுகளுக்கு பிறகு, நாங்கள் மின்சாரம் அளிக்கும் வரை இருளில் இருந்த 18,000 கிராமங்களிலும் வசதியானவர்களா இருந்தார்கள்? ஏழைகள் மீது அன்பு செலுத்துவதாகக் கூறிக் கொள்பவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
வாக்கு வங்கி அரசியலில் மூழ்கியிருந்தவர்களுக்கு இந்த ஏழைகள் 60 ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருந்தது குறித்து சிந்திக்கக் கூட நேரம் இருந்திருக்காது.
மின்சார வசதியற்ற கிராமங்களுக்கு மின்வசதி ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மின்வசதியற்ற 4 கோடி வீடுகளுக்கு செளபாக்யா திட்டத்தின் கீழ் மின்வசதி அளிக்கும் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த 4 கோடி குடும்பங்களில் 25 லட்சம் குடும்பங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்ததாகும் என்றார் மோடி.
ஜார்க்கண்ட் ஆளுநர் திரெளபதி முர்மு, முதல்வர் ரகுவர் தாஸ், மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர்.
சிண்ட்ரியில் மூடப்பட்ட யூரியா தொழிற்சாலையை மீண்டும் திறப்பது, பட்ராதுவில் 2,400 மெகாவாட் மின் உற்பத்திக்கான அனல் மின்நிலையம் அமைப்பது, தேவிகர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் விமான நிலையம், ராஞ்சி மாநகர மக்களுக்கு எரிவாயு குழாய் வசதி ஆகியவை மோடி தொடங்கி வைத்த திட்டங்களாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com