நான்காண்டு ஆட்சி: ராகுல் காந்தி தயாரித்த ரிப்போர்ட் கார்டு; மோடிக்கு ஏ பிளஸ்?

பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மோடியின் ஆட்சிக்கு ராகுல் காந்தி ரிப்போர்ட் கார்டு தயாரித்துள்ளார்.
நான்காண்டு ஆட்சி: ராகுல் காந்தி தயாரித்த ரிப்போர்ட் கார்டு; மோடிக்கு ஏ பிளஸ்?


புது தில்லி: பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மோடியின் ஆட்சிக்கு ராகுல் காந்தி ரிப்போர்ட் கார்டு தயாரித்துள்ளார்.

பாஜக அரசு, நான்காண்டு நிறைவை கோலாகலமாகக் கொண்டாடி வரும் வேலையில், மத்திய அரசுக்கு மதிப்பெண் வழங்கும் பிராக்ரஸ் ரிப்போர்ட் கார்டை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் ராகுல்.

அதில், எதிர்பார்ப்புகளை எல்லாம் மோடி அரசு பொய்யாக்கியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மை, வெளியுறவுக் கொள்கை, எரிபொருள் விலை, வேலை வாய்ப்பை உருவாக்குதல் போன்றவற்றில் மோடி அரசு தோல்வி கண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இவற்றுக்கெல்லாம் காங்கிரஸ் கட்சி தலைவர் 'F' குறியீட்டையே மதிப்பெண்ணாக அதாவது தேர்ச்சி பெறவில்லை (Fail) என்று பதிவிட்டுள்ளார்.
 

ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு ராகுல் ஏ பிளஸ் மதிப்பெண்ணும் வழங்கியுள்ளார். அதாவது, ஸ்லோகன் உருவாக்குதல் மற்றும் சுய விளம்பரங்களில் மோடி அரசுக்கு ஏ பிளஸ் மதிப்பெண் கிடைத்துள்ளது. யோகாவுக்கு பி மைனஸ் மதிப்பெண் போடப்பட்டுள்ளது. 

மேலும், பேசுவதில் வல்லவர், முக்கிய விஷயங்களை தீர்ப்பதில் சிரமம், கவனக்குறைவு போன்ற கருத்துகளையும் மோடிக்கு ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, உடற்பயிற்சி செய்யும்படி கிரிக்கெட் வீரர் விராட் கோலி விடுத்த சவாலை ஏற்றுக் கொள்வதாக மோடி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில், பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்துங்கள், இல்லையென்றால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி அதனை காங்கிரஸ் செய்ய வைக்கும். உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன் என்று ஒரு சவாலை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com