தாய்மொழியை பாதுகாப்பது அவசியம்

"எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம்; ஆனால் தாய்மொழியை மறக்கக் கூடாது. அதை பாதுகாத்தல் அவசியம்'' என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
தாய்மொழியை பாதுகாப்பது அவசியம்

"எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம்; ஆனால் தாய்மொழியை மறக்கக் கூடாது. அதை பாதுகாத்தல் அவசியம்'' என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
 இதுதொடர்பாக ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற தெலங்கானா சரஸ்வதா பரிஷத் அமைப்பின் 75ஆவது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
 நான் ஆங்கிலத்துக்கு எதிரான நபர் கிடையாது. நீங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷியன் உள்ளிட்ட எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், தாய்மொழியை மட்டும் மறக்கக் கூடாது.
 ஏனெனில், தாய் மொழியும், நமது உணர்வுகளும் ஒன்றாக கலந்தவை ஆகும்.
 தெலுங்கு, தமிழ், மராத்தி, கன்னடம், பஞ்சாபி, வங்காளம், அஸ்ஸாமி அல்லது போஜ்புரி போன்ற நமது நாட்டின் மொழிகளை பாதுகாப்பது அவசியம் ஆகும். இதற்காக நான் இலக்குகளை நிர்ணயித்துள்ளேன்.
 கலாசாரங்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கப்படுவது போல், நமது மொழிகளும் ஊக்குவிக்கப்பட வேண்டிய அவசியமாகும். தாய்மொழிகளின் அழகு, எளிமை ஆகியவற்றை நாம் நமது இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும். இதன் காரணமாகவே, நான் எங்கெல்லாம் செல்கிறேனோ, அங்கெல்லாம் தாய்மொழிகள் குறித்து பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளேன்.
 தெலங்கானாவில் ஆரம்ப பள்ளிகளில் தெலுங்கை முதல்வர் சந்திரசேகர் ராவ் கட்டாயமாக்கியிருப்பது, தெலுங்கு மொழியை ஊக்குவிப்பதில் அவர் கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்துகிறது. நிஸாம் ஆட்சிக்காலத்தில் தெலுங்கு மொழியை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் தெலங்கானா சரஸ்வதா பரிஷத் அமைப்பு மேற்கொண்ட பணிகளுக்கு முட்டுக்கட்டைகள் ஏற்பட்டன. இதையும் மீறி, அந்த அமைப்பு தனது பணிகளை செய்தது. அந்த அமைப்புக்கு எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் வெங்கய்ய நாயுடு.
 நிகழ்ச்சியில், ஹிந்தி மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் வெங்கய்ய நாயுடு பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com