தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஐ.நா. அதிகாரி கவலை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ஐ.நா. உயரதிகாரி கவலை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ஐ.நா. உயரதிகாரி கவலை தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
 உலகிலேயே சூரிய மின்சக்தியில் இயங்கும் முதல் சர்வதேச விமான நிலையம், கேரள மாநிலம், கொச்சியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தைப் பார்வையிட வந்த ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டங்களின் தலைமை இயக்குநர் எரிக் சோல்ஹெய்ம், செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தார். அவரிடம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கருத்து
 கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:
 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. துப்பாக்கிச் சூட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறோம். போராட்டங்கள் வன்முறையின்றி நடைபெற வேண்டும். போலீஸார் அடக்குமுறைகளைக் கையாளக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலை பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
 கொச்சியில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையத்தைப் பார்வையிட வந்தேன். இதுபோன்ற உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தும்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இந்தத் திட்டம் தொடர்பாக, பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com