பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்திப்பு

கர்நாடக முதல்வர் குமாரசாமி, பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்திப்பு

கர்நாடகத்தில் தேர்தலுக்கு பின்பான காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து அம்மாநில முதல்வராக மஜத தலைவர் குமாரசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி, பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, நான்காண்டு கால பாஜக ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். 

பின்னர், கர்நாடக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, கர்நாடக அனல் மின் நிலையங்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் நிலக்கரி கிடைக்க தேவை உள்ளிட்டவை குறித்து ஆலோசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சந்திப்பு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, நான் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே கடன்பட்டவன், கர்நாடக மக்களுக்கு அல்ல என்று முதல்வர் குமாரசாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com