உத்தர பிரதேச மக்களவை இடைத்தேர்தல்: பாஜக-வுக்கு தொடர்ந்து பின்னடைவு

உத்தர பிரதேச கைரானா தொகுதி மக்களவை இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது.
உத்தர பிரதேச மக்களவை இடைத்தேர்தல்: பாஜக-வுக்கு தொடர்ந்து பின்னடைவு

உத்தர பிரதேச கைரானா உட்பட 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த திங்கள்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகிறது. 

இந்த இடைத்தேர்தலில் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது உத்தர பிரதேசத்தின் கைரானா தொகுதி தான். காரணம், இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரேதசத்தின் கோரக்பூர் மற்றும் புல்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலிலும் பாஜக தோல்வியை சந்தித்தது. 

குறிப்பாக கோரக்பூர் தொகுதியின் கடைசி 5 மக்களவை தேர்தலில் அம்மாநில் முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், அந்த தொகுதியில் தோல்வியடைந்தது மிகவும் பின்னடைவாக அமைந்தது. 

இந்நிலையில், இந்த தேர்தலில் உத்தர பிரதேசத்தில் இழந்த பெயரை மீட்டெடுக்க இந்த தொகுதியின் இடைத்தேர்தல் முக்கியமாக கவனிக்கப்பட்டது. இதில், பாஜக சார்பாக அந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்து உயிரிழந்த ஹக்கம் சிங்கின் மகள் ம்ரிகம் சிங் போட்டியிடுகிறார். 

அவரை எதிர்த்து ராஷ்ட்ரிய லோக் தளத்தின் தபாசும் ஹாசன் போட்டியிடுகிறார். இவருக்கு சமாஜ்வாதி, காங்கிரஸ், நிஷாத் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன. மேலும், பகுஜன் சமாஜ் கட்சியும் அவருக்கு அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஆதரவு தெரிவித்தது. 

மேலும், முன்னதாக சுயேட்சையாக போட்டியிட்ட தபாசும் ஹாசனின் சகோதரரும் தேர்தலுக்கு முன் வாபஸ் பெற்றார். அதனால், எதிர்கட்சிகள் மிகவும் பலமாக தென்பட்டது. 

இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் ராஷ்ட்ரிய லோக் தளம் முதல் 3 சுற்றுகளின் முடிவில் தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வருகிறது. 

முதல் சுற்று முடிவில் பாஜக 46 வாக்குகள் முன்னிலை வகித்தது. 

2-ஆவது சுற்று முடிவில் பாஜக 4000 வாக்குகள் பின்தங்கி இருந்தது. 

3-வது சுற்று முடிவில் ஏறத்தாழ 3000 வாக்குகள் பின்தங்கி இருந்தது.

சற்று முன்பு வரை மொத்தம் 39,589 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. அதில், ராஷ்ட்ரிய லோக் தளம் 20,898 வாக்குகள் பெற்றுள்ளன. பாஜக 17,724 வாக்குள் பெற்றுள்ளன.

பாஜகவுக்கு முக்கியமான இடைத்தேர்தலாக பார்க்கப்பட்ட இந்த தொகுதியில் பின்தங்கி இருப்பது அந்த கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com