4 மக்களவை, 10 சட்டப்பேரவை இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

4 மக்களவை மற்றும் 10 சட்டப்பேரவை இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
4 மக்களவை, 10 சட்டப்பேரவை இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

உத்தர பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பால்கர், பண்டாரா, கோண்டியா மற்றும் நாகாலாந்து ஆகிய 4 தொகுதிகளில் கடந்த 28-ஆம் தேதி மக்களவை இடைத்தேர்தல் நடைபெற்றது. அத்துடன் நூர்பூர் (உத்தர பிரதேசம்), ஜோகிஹாட் (பிகார்), தாராலி (உத்தரகாண்ட்), கோமியா மற்றும் சிலி (ஜார்கண்ட்), மகேஷ்தலா (மேற்கு வங்கம்), அம்பத்தி (மேகாலாயா), கலூஸ் கடேகான் (மகாராஷ்டிரா), ஷாகோட் (பஞ்சாப்) மற்றும் செங்கணூர் (கேரளா) ஆகிய தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 

இதில், கைரானா, பண்டாரா, கோடியா மற்றும் நாகாலாந்து ஆகிய தொகுதிகளில் உள்ள 73 வாக்கு மையங்களில் நேற்று (புதன்கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இந்த தேர்தலில் மிக முக்கியமாக கருதப்படுவது உத்தர பிரதேசத்தின் கைரானா தொகுதியாகும். ஏனென்றால், உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள பாஜக இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற 2 மக்களவை இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்தது. அதனால், கைரானா தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com