இரு தரப்பு ஒப்புதலுடன் நிகழ்ந்த உறவு அது: புதிய 'மீ டு' புகாருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பதில் 

இரு தரப்பு ஒப்புதலுடன் நிகழ்ந்த உறவு அது என்று தன் மீதான புதிய 'மீ டு புகாருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அக்பர் பதில் அளித்துள்ளார். 
இரு தரப்பு ஒப்புதலுடன் நிகழ்ந்த உறவு அது: புதிய 'மீ டு' புகாருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பதில் 

புது தில்லி: இரு தரப்பு ஒப்புதலுடன் நிகழ்ந்த உறவு அது என்று தன் மீதான புதிய 'மீ டு புகாருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அக்பர் பதில் அளித்துள்ளார். 

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவழி பத்திரிகையாளர் பல்லவி கோகோய். இவர் வெள்ளியன்று அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வாஷிங்க்டன் போஸ்ட் நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் முன்னாள் மத்திய அமைச்சரான எம்.ஜெ. அக்பர் 1990-களின் முற்பகுதியில் தனக்கு பாலியல் ரீதியிலான தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டி இருந்தார். இது பெரும் சர்சையைக் கிளப்பியது 

இந்நிலையில் இரு தரப்பு ஒப்புதலுடன் நிகழ்ந்த உறவு அது என்று தன் மீதான பல்லவியின் புதிய 'மீ டு புகாருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அக்பர் பதில் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குறிப்பிட்ட அந்த கட்டுரையை படிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. இந்த சமயத்தில் சில உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது அவசியமாகும். 1994-ஆம் ஆண்டு வாக்கில் எனக்கும் பல்லவிக்கும் இரு தரப்பு ஒப்புதலுடன் கூடிய உறவு உண்டானது. அது சில மாதங்கள் வரை நீடித்தது. 

இந்த உறவின் காரணமாக எனது தனிப்பட்ட வாழக்கையிலும் சிக்கல்கள் எழுந்தது. இறுதியில் சில மாதங்களில் அந்த உருவானது கசப்புடன் ஒரு முடிவுக்கு வந்தது. 

நான் கூறுவதன் பின்னுள்ள உண்மைகளை என்னுடன் பணிபுரிந்தவர்கள் அறிவார்கள். எந்த சூழ்நிலையிலும் பல்லவி மிரட்டலுக்கு உட்பட்டு இருந்ததைப்  போன்ற சூழல் எதுவும் அங்கு நிலவவில்லை என்பதும் அவர்களுக்கு தெரியும். 

23 வருடங்களுக்கு முன்பாக நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக, கடந்த மாதம் 29-ஆம் தேதி வாஷிங்க்டன் போஸ்ட் நாளிதழ் எனக்கு சில தெளிவற்ற கேள்விகளை அனுப்பி இருந்தது. 

இறுதியாக இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் மறுக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.        
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com