பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு குற்றவியல் பொருளாதார ஊழல்: ராகுல் காந்தி

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொடூரமான சதி மற்றும் குற்றவியல் பொருளாதார ஊழல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தார். 
பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு குற்றவியல் பொருளாதார ஊழல்: ராகுல் காந்தி

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொடூரமான சதி மற்றும் குற்றவியல் பொருளாதார ஊழல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தார். 

மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை இன்றுடன் (நவம்பர் 8) 2 ஆண்டுகள் ஆனது. இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது,

"பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு கோரமான செயல். இந்தியாவில் அரங்கேறியுள்ள கோரமான செயல்களில் இது தனித்துவம் வாய்ந்தது. காரணம், இது ஒரு தற்கொலை தாக்குதல். இது பல லட்சம் மக்களையும், இந்தியாவின் ஆயிரக்கணக்கான சிறு மற்றும் குறு தொழில்களை பாழாக்கியுள்ளது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மோசமான விஷயமே, அது ஏழைகளை பாதிப்படையச் செய்தது. தங்களது சேவைக் கணக்குக்காக அவர்கள் பல நாட்கள் வரிசையில் நிற்க தள்ளப்பட்டனர். கள்ள நோட்டு, பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தப்படும் நோட்டுகள், கறுப்பு பணம் போன்றவற்ற முற்றிலுமாக ஒழித்தல் எனும் அரசின் நோக்கம் எதுவுமே சாத்தியமாகவில்லை. இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்டது அனைத்துமே பேரழிவு தான். 

பிரதமருடைய நினைவுச்சின்ன தவறின் 2-ஆம் ஆண்டு நிறைவுதினத்தில், தகுதியில்லாத நிதியமைச்சர் உட்பட அரசின் மருத்துவர்களுக்கு, பாதுகாக்க முடியாத குற்றவியல் திட்டத்தை பாதுகாக்கவேண்டும் என்கிற விரும்பத்தகாத கடமைகள் உள்ளது.   

ஆனால் அரசு அதை எவ்வளவு தான் மறைக்க முயன்றாலும், மக்கள் அதனை கண்டுபிடிப்பார்கள். பணமதிப்பிழப்பு வெறும் மோசமான சிந்தனை மட்டுமல்ல, தவறாக செயல்படுத்தப்பட்ட ஒரு பொருளாதார திட்டம். ஆனால், அது கவனமாக திட்டமிடப்பட்ட குற்றவியல் பொருளாதார ஊழல். 

நவம்பர் 8 என்பது தீய செயலுக்கான தினம் என்று இந்திய வரலாற்றில் எப்போதும் அழியாமலே இருக்கும்" என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com