தீபாவளிக்கு 'ஒலி மாசு' ஏற்படுத்தி முதலிடம் பிடித்த மும்பை!

தீபாவளியன்று நாட்டிலேயே அதிக அளவிலான ஒலி மாசு ஏற்படுத்திய பகுதிகளில் மும்பை முதலிடம் பிடித்துள்ளது.
தீபாவளிக்கு 'ஒலி மாசு' ஏற்படுத்தி முதலிடம் பிடித்த மும்பை!

தீபாவளியன்று நாட்டிலேயே அதிக அளவிலான ஒலி மாசு ஏற்படுத்திய பகுதிகளில் மும்பை முதலிடம் பிடித்துள்ளது.

தீபாவளி பண்டிகை கடந்த 3 தினங்களாக கொண்டாடப்பட்ட நிலையில், அச்சமயங்களில் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுவதாகக் கூறி, குறிப்பிட்ட 2 மணி நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்திருந்தது. மேலும், குறிப்பிட்ட தரச்சான்றுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தீபாவளியன்று நாட்டிலேயே அதிக அளவிலான ஒலி மாசு ஏற்படுத்திய பகுதிகளின் பட்டியலில் மும்பை முதலிடம் பிடித்துள்ளதாக இயற்கை ஆர்வலர் சுமைரா அப்துலாலி புதன்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவரது அரசு சாரா தன்னார்வ அமைப்பான 'ஆவாஸ்' வெளியிட்ட அறிக்கையில்,

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தீபாவளியன்று மும்பையில் பட்டாசு வெடிக்கப்பட்டது. இதனால் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை விட புதன்கிழமையன்று மட்டும் அதிகளவிலான ஒலி மாசு ஏற்பட்டது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரங்களைக் கடந்தும் பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது.

இதனால் குடியிருப்புப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட 55 டெசிபிள் அளவை விட இரு மடங்கு அதிகரித்து 114.1 அளவிலான டெசிபிள் ஒலி பதிவாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஒலி மாசு குறைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் சில இடங்களில் ஆய்வு செய்த பட்டாசுகள் பசுமை குறியீடு அளவு அனுமதியை மீறி தயாரிக்கப்பட்டதாகவும் இருந்தது. அதன் அமிலங்களும் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக இடம்பெற்றிருந்தாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, அனுமதி மீறி பட்டாசு வெடித்ததாக மும்பையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு எச்சரித்து அனுப்பிவைக்கப்பட்டதாக மும்பை போலீஸார் தெரிவித்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com