பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான் நாட்டின் மிகப்பெரிய ஊழல்: காங்கிரஸ்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில், அது தான் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை குற்றம்சாட்டியது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான் நாட்டின் மிகப்பெரிய ஊழல்: காங்கிரஸ்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில், அது தான் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் ஷர்மா மற்றும் ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

கறுப்புப் பணத்தை கணக்கில் காட்டும் விதமாகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆளுங்கட்சியால் ஏற்படுத்தப்பட்டது. இதுதான் நாட்டின் மிகப்பெரிய ஊழலாகும். நாட்டின் பொருளாதாரம் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. பொதுத்துறை வங்கிகளின் இயக்கம் தடுமாறி வருகிறது. இந்த வேளையில் ரிசர்வ் வங்கியை கைப்பற்றும் செயல்களில் மோடி தலைமையிலான மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது என்று ஆனந்த் ஷர்மா தெரிவித்தார். 

கடந்த முறை பணமதிப்பிழப்பின் ஒராண்டு நிறைவையொட்டி மத்திய அரசு அதை சாதனை எனக் கூறி விளம்பரம் செய்தது, அதற்கு உறுதுணையாக இருந்ததாகக் கூறி மக்களைப் பாராட்டியது. ஆனால், அதை ஏன் இம்முறை செய்யவில்லை. இந்த சுதந்திர நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான் மிகப்பெரிய ஊழலாகும். இதனால் பலரது கறுப்புப் பணம், கணக்கில் காட்டும் விதமாக மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. 

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு அடைந்தது என்ன? கறுப்புப் பணம் உண்மையாகவே கண்டறியப்பட்டதா? பயங்கரவாதம் மற்றும் நக்ஸல் நடவடிக்கைகளை முடக்கியுள்ளதா? என்றால் இவை எதுவும் நடைபெறவில்லை. மாறாக, இந்திய பொருளாதாரம் ரூ.3 லட்சம் கோடி இழப்பை மட்டுமே கண்டது. இதுபோன்ற பேரழிவை ஏற்படுத்தியதற்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கோர வேண்டும். 

இதுபோன்ற செயலை இந்நாட்டு மக்கள் என்றும் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள். தங்களின் வாக்குகளின் மூலம் இதற்கு தக்க பதிலடி தருவார்கள் என்று ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார். 

இந்நிலையில், பணமதிப்பிழப்பின் 2-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது மிகப்பெரிய பேரழிவு, பலரது உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ளது. கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏழைகள், விவசாயிகள், தினக்கூலி வேலை செய்பவர்கள், தொழிலாளர்கள் மற்றும் இல்லத்தரசிகள் உள்ளிட்டோரை பணமதிப்பிழப்பு நடவடிக்கை கடுமையாக பாதித்ததாக காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டியது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com