ஃபிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் தொழில்போட்டி விதிமுறைகளை மீறவில்லை: சிசிஐ

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான ஃபிளிப்கார்ட், அமேசான் ஆகியவை தொழில் போட்டி விதிமுறைகளை மீறவில்லை என்று இந்திய தொழில்போட்டி ஆணையம் (சிசிஐ) தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான ஃபிளிப்கார்ட், அமேசான் ஆகியவை தொழில் போட்டி விதிமுறைகளை மீறவில்லை என்று இந்திய தொழில்போட்டி ஆணையம் (சிசிஐ) தெரிவித்துள்ளது.
 அகில இந்திய ஆன்லைன் விற்பனையாளர்கள் சங்கம் சிசிஐ அமைப்பிடம் புகார் அளித்திருந்தது. 2,000 விற்பனையாளர்கள் இந்த அமைப்பில் உள்ளனர். ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கு எதிராக இந்தப் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
 இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. தற்போதைய நிலையில், ஆன்லைன் சந்தையில் எந்தவொரு நிறுவனமும் ஆதிக்கம் செலுத்தவில்லை. தொழில்போட்டி சட்டத்தின் 4-ஆவது பிரிவையும் ஆன்லைன் நிறுவனங்கள் மீறவில்லை.
 ஆன்லைன் வர்த்தக முறை தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புத்தாக்கம் ஆகும். இது மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com