ஆமதாபாத் பெயரை மாற்றியமைக்க குஜராத் அரசு திட்டம்

குஜராத்தின் ஆமதாபாத் நகரின் பெயரை "கர்ணாவதி' என மாற்றம் செய்வது குறித்து அந்த மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக சட்ட ஆலோசனைகள் கேட்கப்பட்டிருப்பதாகவும்,

குஜராத்தின் ஆமதாபாத் நகரின் பெயரை "கர்ணாவதி' என மாற்றம் செய்வது குறித்து அந்த மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக சட்ட ஆலோசனைகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என குஜராத் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 அண்மையில் உத்தரப் பிரதேச அரசு அலாகாபாத் மற்றும் ஃபைசாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை மாற்றிய நிலையில், அதேபோன்ற நிலைப்பாட்டை தற்போது குஜராத் அரசும் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 11-ஆம் நூற்றாண்டில் கர்ணதேவ் மன்னன் குஜராத்தின் பல பகுதிகளை ஆட்சி செய்தபோது சபர்மதி நதியை ஒட்டியுள்ள ஒரு பகுதியை செப்பனிட்டு புதிய நகர் ஒன்றை நிர்மாணித்தார்.
 அதற்கு கர்ணாவதி என்ற பெயரை அவர் சூட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கால ஓட்டத்தில் அந்த நகரம் மாற்றமடைந்து அதற்கு அருகமைந்த பகுதிகள் இணைக்கப்பட்டு, அதற்கு ஆமதாபாத் எனப் பெயரிடப்பட்டதாகத் தெரிகிறது.
 இந்நிலையில், அந்நகருக்கு மீண்டும் கர்ணாவதி என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. குறிப்பாக, பாஜகவினர் அந்தக் கோரிக்கையை நீண்ட காலமாக முன்வைத்து வருகின்றனர்.
 இதையடுத்து அக்கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து தற்போது ஆளும் பாஜக அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், "ஆமதாபாத் நகரின் பெயரை கர்ணாவதி என மாற்றம் செய்வது குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளோம்; அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும்பட்சத்தில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே பெயர் மாற்றம் செய்யப்படும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com