பெட்ரோல் நிலையங்கள்: மக்களிடம் கருத்து கேட்கிறது நிபுணர் குழு

பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கான விதிகளை எளிமைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவிக்குமாறு மக்களிடம் நிபுணர் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கான விதிகளை எளிமைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவிக்குமாறு மக்களிடம் நிபுணர் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இரண்டு வாரங்களுக்குள் அதுகுறித்த ஆலோசனைகளை அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
 நாடு முழுவதும் தற்போது லட்சக்கணக்கான பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன. புதிதாக அத்தகைய நிலையங்களை அமைக்க வேண்டுமானால், பல்வேறு விதிகளும், கட்டுப்பாடுகளும் உள்ளன. இந்நிலையில், அந்த விதிகளை எளிமைப்படுத்தி சுலபமாக உரிமம் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அமைத்தது.
 அக்குழு கடந்த 2-ஆம் தேதி கூடி இதுதொடர்பாக விவாதித்தது. இந்தச் சூழலில், இவ்விவகாரம் குறித்து பொது மக்களின் கருத்தறிய நிபுணர் குழு முடிவு செய்தது.
 அதன்படி, பெட்ரோல் நிலையங்களை அமைப்பதற்கான விதிகளை சுலபமாக்க என்னென்ன செய்யலாம்? என்பது தொடர்பான ஆலோசனைகளை அளிக்குமாறு மக்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com