சத்தீஸ்கர்: முதல்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

சத்தீஸ்கர் மாநில சட்டப் பேரவைக்கு முதல்கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமை ஓய்ந்தது.

சத்தீஸ்கர் மாநில சட்டப் பேரவைக்கு முதல்கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமை ஓய்ந்தது.
 சத்தீஸ்கர் சட்டப் பேரவையில் உள்ள 18 தொகுதிகளுக்கு வரும் 12ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமை ஓய்ந்தது. அன்டாகர், காங்கர், கேஷ்கல் உள்ளிட்ட 10 தொகுதிகளில் பிரசாரம் சனிக்கிழமை மதியம் 3 மணியுடன் ஓய்ந்தது. எஞ்சிய 8 தொகுதிகளில் பிரசாரம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
 இதையடுத்து 18 தொகுதிகளிலும் வரும் 12ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. அன்டாகர், காங்கர், கேஷ்கல் உள்ளிட்ட 10 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை தேர்தல் நடத்தப்படும். எஞ்சிய 8 தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும்.
 இந்தத் தேர்தலில் முதல்வர் ரமண் சிங் உள்ளிட்ட 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் இந்த 18 தொகுதிகளில் 6இல் மட்டுமே பாஜக வென்றது. 12 தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது.
 முதல்கட்ட தேர்தலில் 31,79,520 பேர் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர். அவர்களில் ஆண்கள் 16,21,839 பேர்; பெண்கள் 15,57,592 பேர் ஆவர். 89 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். முதல்கட்ட தேர்தலையொட்டி, 4,336 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com