வாக்காளர்களை கவரவே நகரங்களின் பெயர்களை மாற்றுகிறது பாஜக: சிவசேனை விமர்சனம்

வாக்காளர்களை கவரவே, நகரங்களின் பெயர்களை பாஜக மாற்றுகிறது என்று சிவசேனை கட்சி விமர்சித்துள்ளது.

வாக்காளர்களை கவரவே, நகரங்களின் பெயர்களை பாஜக மாற்றுகிறது என்று சிவசேனை கட்சி விமர்சித்துள்ளது.
 இதுகுறித்து சிவசேனையின் "சாம்னா' நாளிதழில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாத் நகரின் பெயரை அந்த மாநில அரசு, பிரயாக்ராஜ் என்று மாற்றியது. இதையடுத்து பைசாபாத் மாவட்டத்தின் பெயரை அயோத்தி மாவட்டம் என்று மாற்றியுள்ளது. மேலும், அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
 உயிர் தியாகம் செய்த நூற்றுக்கணக்கான கரசேவகர்களின் கோரிக்கையானது, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதுதான். ராமருக்கு சிலை அமைக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை கிடையாது.
 இதற்கு மாறாக, பைசாபாத்துக்கு புதிய பெயரை மாநில அரசு வைத்துள்ளது. மேலும் ராமர் சிலை தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்களை கவனத்தில் கொண்டு, வாக்காளர்களுக்கு பாஜக அளித்துள்ள லாலிபாப் மிட்டாய்கள்தான் இவை.
 உலகின் பல பகுதிகளில் ராமருக்கு சிலைகள் ஏற்கெனவே இருக்கின்றன. இந்தோனேசியா, மோரீஷஸ், நேபாளம் ஆகிய நாடுகளில் ராமருக்கு மிகப்பெரிய சிலைகள் இருக்கின்றன.
 ஆனால், இந்தியாவில் அயோத்தி சிறையில் இருக்கும் கடவுள் ராமரை விடுவித்து, கோயிலில் வைக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
 அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டும் வகையில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று "சாம்னா'வில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com