ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிப்பது குறித்து ம.பி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை

மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி வெளியிடப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிப்பது குறித்து குறிப்பிடப்படவில்லை என்று
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிப்பது குறித்து ம.பி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை

மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி வெளியிடப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிப்பது குறித்து குறிப்பிடப்படவில்லை என்று அக்கட்சியின் மாநிலத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கமல்நாத் தெரிவித்துள்ளார்.
 மத்தியப் பிரதேச சட்டப் பேரவை தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த தேர்தல் அறிக்கையில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். கடவுள் ராமரையும், ஆர்எஸ்எஸ் அமைப்பையும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா, கட்சியின் துணை தலைவர் பிரபாத் ஜா, மத்தியப் பிரதேச மாநில பாஜக தலைவர் ராகேஷ் சிங் ஆகியோர் புகார் தெரிவித்திருந்தனர்.
 இந்த குற்றச்சாட்டுகளை மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். போபாலில் செய்தியாளர்களிடம் பேசியபோது, இதுகுறித்து அவர் கூறியதாவது:
 கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படவில்லை. நானும் அதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
 எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நலத் திட்டங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு, ஆர்எஸ்எஸ் விவகாரத்தை பாஜக எழுப்புகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கும் திட்டம், கட்சிக்கு ஒருபோதும் கிடையாது.
 அரசு வளாகங்கள் தவிர்த்து, பிற இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது நிகழ்ச்சிகளை சுதந்திரமாக நடத்தி கொள்ளலாம். ஆர்எஸ்எஸ் அமைப்பானது கலாசார அமைப்பா? அல்லது அரசியல் அமைப்பா? என்பது குறித்து மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதில் நாங்கள் தலையிட மாட்டோம்.
 கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் ராமர் கோயில் குறித்து பாஜக எதுவும் தெரிவிக்கவில்லை. மக்களவைக்கு தேர்தல் நடைபெற இன்னமும் 6 மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், ராமர் கோயில் விவகாரம் பாஜகவின் நினைவுக்கு மீண்டும் வந்துள்ளது என்றார் கமல்நாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com