பாலியல் குற்றங்களுக்கான தண்டனையில் பாகுபாடு? மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

பாலியல் குற்றங்களுக்கான இந்திய தண்டனையியல் சட்டத்தின் 375-ஆவது பிரிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ளது.

பாலியல் குற்றங்களுக்கான இந்திய தண்டனையியல் சட்டத்தின் 375-ஆவது பிரிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ளது.
 இதுதொடர்பாக தன்னார்வ அமைப்பு ஒன்று சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
 பொதுவாக 375 சட்டப் பிரிவின்படி, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் ஆண்களுக்கு என்னென்ன தண்டனை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது; அதேவேளையில், ஆண்களையோ அல்லது திருநங்கைகளையோ பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினால் அதற்கு எத்தகைய தண்டனை என்பது முறையாக வரையறுக்கப்படவில்லை.
 பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் பாலினப் பாகுபாடுகளுடன் வகுக்கப்பட்டுள்ளன. எனவே, அதுதொடர்பான சட்டப் பிரிவு 375 அரசியல் சாசனப்படி செல்லத்தக்கதுதானா? என்பதை அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
 அந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கெüல் ஆகியோர் அதனை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com