சத்தீஸ்கர் முதல்கட்ட தேர்தலில் 76.28% வாக்குகள் பதிவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு திங்கள்கிழமை நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 76.28 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு திங்கள்கிழமை நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 76.28 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ராய்ப்பூரில் தலைமை தேர்தல் அதிகாரி சுப்ராத் சாஹூ கூறுகையில், சத்தீஸ்கரில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 76.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகப்பட்சமாக டோன்கார்கோனில் 85.15 சதவீதமும், குஜ்ஜில் 84.48 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. இத்தேர்தலில் கிராமப் பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் மக்கள் பங்கெடுத்தனர் என்றார்.
முன்னதாக, சத்தீஸ்கர் சட்டப் பேரவையில் உள்ள 18 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புக்கு இடையே முதல்கட்டமாக கடந்த திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், 70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சத்தீஸ்கர் சட்டப் பேரவையில் எஞ்சியுள்ள 72 தொகுதிகளுக்கு வரும் 20ஆம் தேதி 2ஆம் கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com