ஜெகன் மீதான தாக்குதல்: ஆந்திர காவல்துறை, மத்திய அரசுக்கு ஹைதராபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டின விமான நிலையத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தாக்கப்பட்ட வழக்கில், ஆந்திர மாநிலத்தின் காவல் துறை


ஆந்திர மாநிலம், விசாகப்பட்டின விமான நிலையத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தாக்கப்பட்ட வழக்கில், ஆந்திர மாநிலத்தின் காவல் துறை மற்றும் மத்திய அரசுக்கு ஹைதராபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விசாகப்பட்டினம் விமான நிலையத்தில், ஆந்திர மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியை, உணவகத்தில் பணிபுரியும் ஸ்ரீநிவாஸ் என்னும் இளைஞர் கடந்த அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி கத்தியால் தாக்கினார். அதையடுத்து தன்னைக் கொல்வதற்கு சிலர் சதி திட்டம் தீட்டியதாகவும், ஆந்திர மாநில காவல்துறையின் விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும் ஜெகன் மோகன் குற்றம்சாட்டினார். 
அதைத் தொடர்ந்து ஜெகன் மோகன் தாக்கப்பட்ட வழக்கில் ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத அமைப்பின் விசாரணை வேண்டும் என்று அவரது சார்பாக ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.பி.என். ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை மூடி சீலிட்ட உறையில் வைத்து இரண்டு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
மேலும், விமான நிலைய பாதுகாப்பு விவகாரம் குறித்து, ஆந்திர காவல் துறை தலைவர், விசாகப்பட்டினம் உதவி காவல் ஆணையர் மற்றும் மத்திய அரசு ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று கூறி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை இரண்டு வாரத்துக்கு பின் ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com