தெலங்கானா: காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.


தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
தெலங்கானா சட்டப் பேரவைக்கு வரும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 65 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில தலைவர் என். உத்தம் குமார் ரெட்டி ஹஜூர்நகர் தொகுதி வேட்பாளராகவும், அவரது மனைவி என். பத்மாவதி ரெட்டி கோடாட் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். கலைக்கப்பட்ட தெலங்கானா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கே. ஜனா ரெட்டி நாகார்ஜுனா சாகர் தொகுதி வேட்பாளராகவும், மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஏ. ரேவந்த் ரெட்டி கோடங்கல் தொகுதி வேட்பாளராகவும், மாநில பிரசார கமிட்டி தலைவர் எம். பாட்டி விக்ரமார்கா மதிரா தொகுதி வேட்பாளராகவும், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம். அனில் குமார் யாதவ் முஷீராபாத் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் முன்னாள் எம்.பி.க்கள் பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்களில் முன்னாள் எம்.பி.க்கள் சர்வே சத்யநாராயணா (செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதி), பொன்னம் பிரபாகர் (கரிம்நகர்), பி. பல்ராம் நாயக் (மஹபூபாபாத்) ஆகியோரும் அடங்குவர்.
இதேபோல், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் கடைசியாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த பலரது பெயர்களும், முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் உள்ளது. இதுதவிர்த்து, காங்கிரஸ் கட்சியில் அண்மையில் சேர்ந்த சிலருக்கும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா சட்டப் பேரவையில் உள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி எண்ணப்படுகின்றன. 
இத்தேர்தலில் காங்கிரஸும், தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), பாஜக ஆகியன எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com