பிரதமர் மோடி இன்று சிங்கப்பூர் பயணம்

ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, கிழக்காசிய நாடுகள் மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை சிங்கப்பூருக்கு செல்லவிருக்கிறார்.
பிரதமர் மோடி இன்று சிங்கப்பூர் பயணம்


ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, கிழக்காசிய நாடுகள் மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை சிங்கப்பூருக்கு செல்லவிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, கிழக்காசிய நாடுகள் மாநாடு ஆகியவற்றில் எனது பங்கேற்பு, ஆசியான் நாடுகள் மற்றும் இந்திய-பசிபிக் பிராந்திய நாடுகளுடனான இந்தியாவின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும். ஆசியான் மற்றும் கிழக்காசிய நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்புகளை, ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளேன்.
சிங்கப்பூரில் புதன்கிழமை நடைபெறும் சிங்கப்பூர் ஃபின்டெக் திருவிழாவில் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளேன். நிதிசார் தொழில்நுட்பத் துறையில் உலகின் மிகப்பெரும் நிகழ்வாக கருதப்படும் இந்த விழா, இந்தியாவின் வலிமையை எடுத்துரைக்க சிறப்பான தளமாகும். ஆசியான் அமைப்பின் நிகழாண்டுக்கான தலைவர் என்ற முறையில் சிங்கப்பூருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இப்பயணத்தின்போது, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை, மோடி சந்தித்துப் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com